சீன அதிபர் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்ததன் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பு இன்று (03) சீனாவில் நடைபெறுகின்றது. இதன் போதே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




