2026 October 11, Sunday ⛅ கண்டி 22°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி !

உள்ளூர்April 3, 2026 · 6 months முன்5
சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி !

2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 183,979 ஆகும். 

இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.7% சதவீத வீழ்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மாத்திரம் 47,533 (26%) பேர் இலங்கை வந்துள்ளனர். 

அத்துடன் மார்ச் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 18,092 பேரும், ரஷ்யாவிலிருந்து 15,685 பேரும், ஜேர்மனியிலிருந்து 13,429 பேரும், சீனாவிலிருந்து 14,064 பேரும் மற்றும் பிரான்சிலிருந்து 8,359 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

இதற்கமைய, 2026 ஜனவரி 01 முதல் மார்ச் 31 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 740,634 ஆகப் பதிவாகியுள்ளது.