2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மலையக மக்களின் குரலாக ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி!

உள்ளூர்April 2, 2026 · 6 months முன்4
மலையக மக்களின் குரலாக ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது , மலையக மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் காணிப் பிரச்சினைகள் மற்றும் வீட்டு வசதி குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு,மலையகப் பாடசாலைகளின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மலையகப் பாடசாலைகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். குறிப்பாக கல்வி மற்றும் காணி விவகாரங்களில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.