2026 October 12, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ⛈️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெனிசுவேலாவை உலுக்கிய 7.1 மற்றும் 7.5 ரிக்டரில் 2 நிலநடுக்கங்கள்

உலகம்June 25, 2026 · 4 months முன்4
வெனிசுவேலாவை உலுக்கிய 7.1 மற்றும் 7.5 ரிக்டரில் 2 நிலநடுக்கங்கள்

வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்நாட்டின் தலைநகர் கராகஸில் உள்ள கட்டிடங்களை குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்ற. 

வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் (Moron) பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. கராகஸில் நிலநடுக்கத்தால் ஆடிய கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். 

உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. 

இதேவேளை, அண்டை நாடான கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு சிலர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.