2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மலேசியா ஊடாக சிகரெட் கடத்த முயன்ற 3 சீன தொழிலதிபர்கள் கைது!

உள்ளூர்May 25, 2026 · 3 months முன்1

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் “பசுமை வழித்தடம்” (Green Channel) வழியாக, சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று வெளிநாட்டு பயணிகள் இன்று (25) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீன நாட்டு தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக இவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சிகரெட் தொகையை சீனாவில் கொள்வனவு செய்துள்ள இவர்கள், முதலில் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து இன்று (25) அதிகாலை 1.05 மணிக்கு “பாடிக் ஏர்” (Batik Air) நிறுவனத்திற்குச் சொந்தமான OD-297 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலைய வருகை முனையத்தில், எவ்வித பொருட்களும் தங்களிடம் இல்லை என அறிவிக்கும் “பசுமை வழித்தடம்” (Green Channel) ஊடாக தப்பிச்செல்ல முயன்றபோதே, சுங்க அதிகாரிகள் இவர்களை மறித்துச் சோதனை செய்துள்ளனர்.

இவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளை (Suitcases) சோதனை செய்தபோது, அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 40,400 சிகரெட்டுகள் அடங்கிய 202 சிகரெட் அட்டைப் பெட்டிகள் (Cartons) கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி 660,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சீன தொழிலதிபர்கள் மூவரிடமும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.