2026 October 16, Friday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ரஷ்ய இராணுவ விமானம் விபத்தில் 29 பேர் பலி !

உலகம்April 1, 2026 · 7 months முன்3
ரஷ்ய இராணுவ விமானம் விபத்தில் 29 பேர் பலி !

கிரிமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து வானூர்தி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ரொய்டர்ஸ் ஊடகத்தில் வெளியாகிய செய்திகளின் படி, நேற்று மொஸ்கோ நேரப்படி மாலை 6 மணியளவில் கிரிமியன் தீபகற்பத்தின் வான்பரப்பில் திட்டமிடப்பட்ட பயணத்திலிருந்த குறித்த வானூர்தி, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் முடிவில், வானூர்தி விபத்துக்குள்ளான சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.விபத்துக்குள்ளான வானூர்தியில் 6 விமானப் பணியாளர்கள் மற்றும் 23 பயணிகள் என மொத்தம் 29 பேர் பயணித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.