2026 October 27, Tuesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

உள்ளூர்January 25, 2026 · 9 months முன்4
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

உலக வங்கி குழுமத்தின் அங்கத்துவ அமைப்பான சர்வதேச நிதி நிறுவனம் , இலங்கை வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் 166 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர்மட்ட முதலீட்டுத் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. 

இலங்கையின் தனியார் துறைக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை இது மீள உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. 

இந்த விரிவான நிதியானது, சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான நிதி அணுகலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

குறிப்பாக பெண்களுக்குச் சொந்தமான வணிகங்கள் மற்றும் விவசாய வணிகத் துறையை வலுப்படுத்துவதில் இது கவனம் செலுத்துவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கைப் பொருளாதாரத்தின் இத்தகைய முக்கிய துறைகளைக் குறிவைப்பதன் மூலம், உள்ளடக்கிய வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், பின்தங்கிய குழுக்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த நிதி உதவி எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த முதலீடு இலங்கையின் முன்னணி மூன்று தனியார் வணிக வங்கிகளில் மூலோபாய ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவியில் 50 மில்லியன் டொலர் கடன் உதவியாகும். 

80 மில்லியன் டொலர் அபாயப் பகிர்வு வசதிகளாகவும், எஞ்சிய 36 மில்லியன் டொலர் வர்த்தக நிதி ஆதரவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.