2026 September 7, Monday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!

இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!

உள்ளூர்September 7, 2026 · 1 hour முன்7
இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!

காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் 

இவ்வாறு கைதானவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் 13 பேரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.