2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

12 இந்திய மீனவர்கள் கைது!

உள்ளூர்February 24, 2026 · 6 months முன்0
12 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னாரிற்குத் தெற்கு திசையில் இந்நாட்டு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இந்த இந்திய மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் குழுவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்வள ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.