2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

1.1 மில்லியன் வழக்குகள் தேக்கம்! நீதித்துறையை வேகப்படுத்த SJB அதிரடி முன்மொழிவு

உள்ளூர்August 4, 2026 · 2 weeks முன்1
1.1 மில்லியன் வழக்குகள் தேக்கம்! நீதித்துறையை வேகப்படுத்த SJB அதிரடி முன்மொழிவு

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தெரிவுக்குழுவொன்றைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் முன்மொழிவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை நீதித்துறை முறைமைக்குள் தற்போது 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுவதால், இந்த வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று முன்மொழிவொன்றில் கையொப்பமிடப்பட்டது. 

இந்த முன்மொழிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் கையொப்பமிட்டனர். 

இதன்படி, அந்த முன்மொழிவை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.