2026 October 15, Thursday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புத்தாண்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு விசேட அறிவிப்பு வெளியீடு

உள்ளூர்April 12, 2026 · 6 months முன்5
புத்தாண்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு விசேட அறிவிப்பு வெளியீடு

தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படாத வகையில் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு விளையாட்டு மருத்துவ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் வெளிப்புற இடங்களில் நடத்தப்படுவதாயின், அவை திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு பல இடங்களில் புத்தாண்டு விழாக்கள் உள்ளிட்ட விசேட விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இருப்பினும், தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை அதிக சோர்வை ஏற்படுத்தும் விளையாட்டுக்களுக்கு உகந்ததல்ல என்பதால், இது குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு வைத்தியர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெயில் படக்கூடிய இடங்களில் நீண்ட நேரம் தங்கியிருக்காமல், நிழலான இடங்களில் அத்தகைய விளையாட்டுக்களைத் திட்டமிட்டு நடத்துமாறு புத்தாண்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.