வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

நாட்டில் இன்று மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு – ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யும், சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ் வேளைகளில் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.




