2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்க பனிப்புயல் : 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்தடை

உலகம்January 26, 2026 · 7 months முன்2
அமெரிக்க பனிப்புயல் :  10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்தடை

அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் மற்றும் தெற்குப் பகுதியைத் தாக்கிய ஒரு பெரிய பனிப் புயலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்து வரையிலான முக்கிய வானிலை அமைப்பு ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.

இதனால் சாலைகளில் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன .மேலும் பெருமளவிலான விமான இரத்துகள் மற்றும் மின் தடைகளும் ஏற்பட்டுள்ளன.

லூசியானாவிலும் நியூயோர்க் நகரத்திலும் ஏனைய இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பட்டனர்.

விமான நிலையங்கள் மூடப்பட்டதால் அமெரிக்கா முழுவதும் 17,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. 

இதற்கிடையில், அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு வலைத்தளமான PowerOutage.us தெரிவித்துள்ளது.

பனிக்கட்டிகள் மின் கம்பிகளில் படிந்து இருத்தல் மற்றும் மரக்கிளைகள் மின் கம்பிகளில் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மின் தடை அட்லாண்டிக் பெருங்கடலின் நடுப்பகுதி வரை விரிவடைந்தது. 

டென்னசியில் 330,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.

மிசிசிப்பியில் 160,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், லூசியானாவில் 135,000 க்கும் மேற்பட்டவர்களும் மற்றும் டெக்சாஸில் 90,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் மின் தடையினை எதிர்கொண்டனர்.

மின் தடைகள் பல நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கின் அதிக மக்கள் தொகை கொண்ட இன்டர்ஸ்டேட்-95 நடைபாதையில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பாஸ்டன் உட்பட சில நகரங்கள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

அதே பரந்த புயல் அமைப்பு தென்கிழக்கில் சேதப்படுத்தும் பலத்த காற்று மற்றும் சூறாவளிகளையும் ஏற்படுத்தியது.