2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

உள்ளூர்March 5, 2026 · 5 months முன்2
220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரையும் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 3ஆம் திகதி (03) பிற்பகல் 2:00 மணியளவில் நுவரெலியா இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நுவரெலியா மது வரித் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தி தமிழ்நாட்டில் உள்ள காய்கறி கடையின் உரிமையாளர் என்று கூறிக்கொள்ளும் இந்தியர் ஒருவரைக் கைது செய்தனர்.

அத்தோடு நுவரெலியா பியதிஸ்ஸ புரத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரையும், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள இந்திய நாட்டவருக்குச் சொந்தமான காய்கறி கடையில் சட்டவிரோதமாக விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 220 வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சிகரெட்டுகளையும் கைப்பற்றி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் தலா ரூ. 20,000 அபராதம் விதித்து நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார்.

அபராதம் செலுத்திய பின்னர் இருவரையும் விடுதலை செய்யுமாரு நீதிபதி திருமதி புத்திகா தர்மதாச உத்தரவு பிறப்பித்தார்.