2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை !!

உலகம்August 14, 2025 · 1 year முன்3
ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை !!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ரஷ்யா – அமெரிக்க ஜனாதிபதிகள் இருவரும் நாளை (15) சந்தித்து பேசவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில், நாளைய சந்திப்புக்குப்பின் உக்ரைன் போரை புட்டின் தொடர்ந்து நடத்தினால், ரஷ்யாவுக்கு மிகக் கடுமையான விளைவுகள் இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் டொனால்ட் ட்ரம்ப் காணொளி மூலம் நடத்திய ஆலோசனையில், அலாஸ்காவில் நடைபெறும் அமெரிக்க – ரஷ்யா மாநாட்டின்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்கா விரும்புகிறது. என்பதை தெளிவாக ட்ரம்ப் கூறியதாக பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.