நாட்டின் இன்றைய வானிலை.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




