2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் நீடிப்பு

உலகம்November 1, 2025 · 10 months முன்0
இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் நீடிப்பு

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீடிக்க இரு நாடுகளும் நேற்று (31) ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.

 இது குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்திவைத்த துருக்கி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒக்டோபா் 15-ஆம் திகதி அமுலுக்கு வந்த போா் நிறுத்தத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனா். அந்த போா் நிறுத்த அமுலாக்கம் குறித்து இரு நாட்டு பிரதிகளும் தொடா்ந்து ஆலோசனை நடத்துவாா்கள்.

 இரு நாடுகளின் உயா்நிலை தலைவா்களும் இஸ்தான்புல்லில் நவம்பா் 6-ஆம் திகதி நேரில் சந்தித்துப் பேசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 எல்லை போா் நிறுத்தம் அமுலில் இருக்கும் நேரத்தில், அது முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா்.

 இத்தகைய உடன்பாட்டை எட்டியதற்காக, மஸ்தியஸ்த நாடுகளான துருக்கியும் கட்டாரும் பாகிஸ்தான், ஆப்கான் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றன.

 பாகிஸ்தான் – ஆப்கன் எல்லையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவற்காக துருக்கியும் கத்தாரும் முயற்சிகளைத் தொடா்ந்து மேற்கொள்ளும் என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.