2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மகாநாம கல்லூரியில் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம் – சஜித் அதிர்ச்சி வெளிப்பாடு !

உள்ளூர்October 22, 2025 · 10 months முன்0
மகாநாம கல்லூரியில் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம் – சஜித் அதிர்ச்சி வெளிப்பாடு !

கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம் திகதி சனிக்கிழமை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.

என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து அதிபரோ அல்லது ஆசிரியர்களோ எந்தத் தெளிவானதொரு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

மருத்துவர்களிடம் அனுப்பும் நடவடிக்கையோ, தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனம் குறித்தோ அல்லது இந்த துஷ்பிரயோகத்தைச் செய்த குற்றவாளிக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை

அதிபர், இது தொடர்பில் பேச முயன்ற இரு ஆசிரியர்களையும் மிரட்டியதாகவும், பெற்றோர்களை நீதிமன்ற நடவடிக்கைகள், வழக்குத் தாமதங்கள் மூலம் பயமுறுத்தியுள்ளார்.

மேலும், இவ் விவகாரம் குறித்து முறையான விசாரணையை நடத்தி, குறித்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்குமாறும், வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தக் குற்றவாளி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த செல்வாக்குக்கும் அடிபணியாமல் விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.