2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

மலையக மக்களின் கௌரவத்தை மதித்து அரசாங்கம் செயற்படும் – ஜனாதிபதி உறுதி!

உள்ளூர்October 12, 2025 · 10 months முன்1
மலையக மக்களின் கௌரவத்தை மதித்து அரசாங்கம் செயற்படும் –  ஜனாதிபதி உறுதி!

பண்டாரவளையில் இன்று இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் மேல் மட்டத்திலுள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதிபட கூறினார்.

அதேவேளை, போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் எந்தவித பின்னடைவும் இருக்காது எனவும் தெரிவித்தார்.

200 வருடங்களாக மலையகத்தில் வாழும் ஒரு சமூகத்திற்கு காணி உரிமை கூட இல்லாத நிலையை மாற்ற, அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1700 ரூபா சம்பள கோரிக்கை, சுகாதாரம், கல்வி, குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக மலையக மக்களுக்கு நியாயமான வாழ்க்கை தரம் வழங்க பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

மலையக மக்களின் கௌரவத்தையும் கலாசாரத்தையும் மதித்து, அவர்களது சமூகத்தை உயர்த்த அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் எனவும் ஜனாதிபதி இந் நிகழ்வில் உறுதியளித்துள்ளார்.