2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை : ஆனந்த விஜேபால

உள்ளூர்November 12, 2025 · 9 months முன்2
எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை : ஆனந்த விஜேபால

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாட்டின் புலனாய்வு பிரிவுகள் தீவிரமாக செயற்பட்டு வருவதால், தேசிய பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லையென அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது அத்தகைய அச்சுறுத்தல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இலங்கையின் புலனாய்வு பிரிவுகள் தொடர்ந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

நமது பாதுகாப்புப் படைகள், குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தவித பிரச்சினையும் இல்லை என்றார்.