2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

தொழிற்சாலைக்குள் அத்துமீறிய ஜீவன் நீதிமன்றில் ஆஜர்.

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்2
தொழிற்சாலைக்குள் அத்துமீறிய ஜீவன் நீதிமன்றில் ஆஜர்.

கெளனிவெளி பெருந்தோட்ட பகுதிக்கு உட்பட்ட “பீட்ரு” தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

இவ் வழக்கில் சி.சி டிவி காணொளிகளை பரீசீலினை செய்யுமாறு, மீண்டும் இவ் வழக்கினை 26 திகதிக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

– இதன் போது ஊடகங்களில் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

நாங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக வரவில்லை, கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனங்கள் நம் தோட்ட தொழிலாளர் மக்களை இழிவு படுத்துவதன் காரணமாகவே அதை நாம் தட்டிக் கேட்டோம்.

ஆனால், அவர்கள் வாதங்களை மற்றும் முன்வைத்து வழக்கு தாக்கல் செய்துவிட்டனர். இதை நாங்கள் தீர்த்துக்கொள்வோம் என்றார்.

மேலும், அரசு தரப்பில் நமது தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை அதிகரித்து தருவதாக அவர்கள் கூறினார்கள். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.