புறக்கோட்டையில் தீ – விசாரணை குழு நியமனம்.

கொழும்பு புறக்கோட்டை, 1வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு மின் சாதனக் கடையில் நேற்று சனிக்கிழமை (20) ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சரான வழக்கறிஞர் சுனில் வட்டகல தலைமை தாங்குகிறார்.
சனிக்கிழமை (20) மதியம் கொழும்பில் ஏற்பட்ட தீவிபத்து, விமானப்படை, கடற்படை மற்றும் தீயணைப்புப் பிரிவின் கூட்டு முயற்சியால் 12 மணி நேரத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்களும், விமானப்படையின் Bell-212 ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




