துசித ஹல்லொலுவவுக்கு பிணை.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு குற்றவியல் பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அண்மையில் துசித ஹல்லொலுவ, நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனத்தின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




