2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது. #Video

உள்ளூர்October 25, 2025 · 10 months முன்0
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது. #Video

யாழில் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு பேரிடமிருந்தும் எழு கிராம் ஹெரோயின் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படும் நிலையில் யாழ்ப்பாணம் பொலிசாரின் இன்றைய தீடீர் சோதனையின் போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சந்தேக நபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும் ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.