சரோஜாதேவிக்கு “கர்நாடகா” ரத்னா விருது.

தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மறைந்த மூத்த நடிகை சரோஜாதேவிக்கு இந்தியாவின் கர்நாடக மாநில அமைச்சரவை கர்நாடகா ரத்னா விருது வழங்க முடிவு செய்துள்ளது. மற்றும் மறைந்த நடிகர் விஷ்ணுவர்தன் இவ் உயரிய விருதினை வழங்க கர்நாடக அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
திரைப்படத்துறையினராலும், ரசிகர்களாலும், ‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘அபிநய சரசுவதி’ போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் மாநில அரசு விருதுகளையும் வென்றவர் சரோஜா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.




