2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

நீ அரியணை ஏறும் நாள் உன் தொண்டர்களின் திருநாள் – தாயார் ஷோபா வாழ்த்து.

உலகம்August 21, 2025 · 1 year முன்2
நீ அரியணை ஏறும் நாள் உன் தொண்டர்களின் திருநாள் –  தாயார் ஷோபா வாழ்த்து.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடைபெற உள்ள நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்த தலைவர் விஜய், முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். தொடர்ந்து இன்று மதுரையில் இரண்டாவது மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்தியுள்ளார்.

“திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி, தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள்.

தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு.. நேர்மையான தலைவன் என்பதற்கு நிதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை. உன் வெற்றிக்கு வானமே எல்லை. வாழ்த்துக்கள் விஜய் என கூறியுள்ளார்.