2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

மாகாண சபை தேர்தல்கள் அடுத்த ஆண்டில் -பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க

உள்ளூர்September 23, 2025 · 12 months முன்3
மாகாண சபை தேர்தல்கள் அடுத்த ஆண்டில் -பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க

மாகாண சபை தேர்தல்கள் அடுத்த ஆண்டில் நடத்துவதற்கு முயற்சி செய்வோம் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்


யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்


எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம் தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அவற்றிற்கு தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என மேலும் தெரிவித்தார்


யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிஙக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் நடைபெறும் நடமாடும் சேவையை நிகழ்வில் கலந்து கொணடதோடு அலுவலத்தையும் கண்காணித்தார்


இந்நிகழ்வில் S.சிவறஞ்சினி வடமாகாண பரத் தொழில் ஆணையாளர் 

K.நாகேந்திரன் – வடமாகாண அலுவலக உதவி தொழில் ஆணையாளர்

A.அன்ரன் தனேஸ் – யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் 

 யாழ் மாவட்ட தொழில் திணைக்கள அதிகாரிகள் நடமாடும் சேவையை பெற வந்த பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்