2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுமார் 16 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் மூவர் கைது

உள்ளூர்February 16, 2026 · 6 months முன்1
சுமார் 16 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் மூவர் கைது

சுமார் 16 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருளுடன் நேற்று இரவு, இலங்கைக்கு வந்த மூன்று பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இரு ஆண்களும், 35 வயதுடைய ஒரு பெண்ணும் ஆவர். இவர்களில் ஒருவர் அப்பகுதியில் “ஸ்பா” (Spa) மசாஜ் நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்காக் நகரில் கொள்வனவு செய்து, அங்கிருந்து டுபாய் சென்று, பின்னர் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் நேற்று இரவு 07:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் ஒன்றைச் சோதனையிட்ட போது, 60 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 16 கிலோ 400 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்படவுள்ளனர்.