2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!

வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு!

உலகம்May 24, 2026 · 3 months முன்3

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வகையில் ஆயுதத்துடன் அப்பகுதியில் நடமாடிய நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அமெரிக்க இரகசிய பாதுகாப்புப் பிரிவினரும் பொலிஸாரும் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கடுமையாக காயமடைந்த அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்றதும் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதுடன், பல வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்த துப்பாக்கிச் சம்பவத்தில் அருகில் இருந்த மற்றொருவரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், பாதுகாப்பு அதிகாரிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.