2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு

உள்ளூர்May 19, 2026 · 3 months முன்2
பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு


பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலமானது, நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். 

அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட சவாலொன்றைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். 

இந்தச் சட்டமூலம் ஒட்டுமொத்தமாகவும், அதேபோன்று அதில் உள்ள ஒவ்வொரு விதிகளும் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவுக்கும் முரணாக அமையவில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.