2026 October 12, Monday ⛅ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

உள்ளூர்May 19, 2026 · 5 months முன்4
அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்கு தேவையான பாரிய கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சின் செயலாளர் சூரியன் செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

புதிய சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைத் தடுக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .