2026 October 13, Tuesday 🌫️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 24°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அமெரிக்கா – ஈரான் உறவில் மீண்டும் பதற்றம்!

உலகம்May 28, 2026 · 5 months முன்6
அமெரிக்கா – ஈரான் உறவில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல் பாணியிலான பேச்சுக்களுக்கு ஈரான் ஒருபோதும் “பின்னடையாது” என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது “சிவப்பு கோடுகளை” அதாவது மறுக்க முடியாத கொள்கை எல்லைகளை உறுதியாகப் பின்பற்றும் என்று குறிப்பிட்ட அசிசி, “யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவசம் வைத்திருத்தல், ஹோர்முஸ் நீரிணையின் மீதான அதிகாரம் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குதல்” ஆகியவை இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மூலோபாய முட்டுக்கட்டையிலிருந்து தப்பிப்பதற்கான வழியைத் தேடும் ட்ரம்ப், அச்சுறுத்தல்களை விடுப்பதற்கும் உடன்படிக்கைக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இடையில் மாறி மாறிச் செயல்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது” என்றும் இப்ராஹிம் அசிசி குறிப்பிட்டுள்ளார்.