இலங்கை – கொரிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் கொரிய தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை மற்றும் கொரியாவுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
கொரிய தேசிய சபையின் பிரதி சபாநாயகர் லீ ஹேக் யங் தலைமையிலான நாடாளுமன்றத் தூதுக்குழுவினரே அமைச்சரை இவ்வாறு சந்தித்துள்ளனர்.
‘தித்வா’ சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிக்கு கொரிய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக அமைச்சர் இதன்போது கொரிய தூதுக்குழுவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.








