2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வௌியீடு

உள்ளூர்February 4, 2026 · 6 months முன்1
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வௌியீடு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழி (Online) முறைமை நாளை (05) முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 9.00 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளிடமிருந்தும் (ஆண், பெண் இருபாலாரும்) இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான இணையவழி முறைமை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியுடன் நிறைவடையும்.

மேலதிக விபரங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் வெளியிடப்பட்டுள்ளன.

இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ் “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.