2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் உயர்வு

உள்ளூர்June 6, 2026 · 2 months முன்2

இலங்கையின் உத்தியோகபூர்வ இருப்புச் சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2026 மே மாத இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ இருப்புச் சொத்துக்கள் 1.6% அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த இருப்பு 6.766 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த நிலையில், ஒரே மாதத்தில் 107 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த உத்தியோகபூர்வ இருப்புச் சொத்துக்கள் புள்ளிவிவரத்தில், சீன மக்கள் வங்கியுடனான (People’s Bank of China) நாணயப் பரிமாற்றல் ஒப்பந்தத்தின் மூலமான நிதி உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை பயணித்து வரும் நிலையில், இந்த இருப்புச் சொத்துக்களின் உயர்வு நிதித்துறையில் சாதகமான ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது