2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜப்பானில் பனி – உயிரிழப்பு 35 ஆக உயர்வு

உலகம்February 4, 2026 · 6 months முன்2
ஜப்பானில் பனி – உயிரிழப்பு 35 ஆக உயர்வு

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 அடி வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் நீகாட்டா மாகாணத்தில் 12 பேரும், உவோனுமா நகரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 50 வயதுடைய முதியவர் உள்பட இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீதோஷ்ண நிலை மோசமாகக் காணப்படும் அதே சூழலில் அங்கு மின்வெட்டும் நிலவுவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் பலரும் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் போவதால் சிரமத்தையும் சந்தித்து வருவதுடன் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.