2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அனுமதியின்றி 3500 கிலோ கழிவு தேயிலை கடத்தல் – லொறியுடன் இருவர் கைது !

உள்ளூர்September 7, 2025 · 11 months முன்2
அனுமதியின்றி 3500 கிலோ கழிவு தேயிலை கடத்தல் – லொறியுடன் இருவர் கைது !

அனுமதிப்பத்திரம் இல்லாமல் 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியுடன், இரண்டு சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் இன்று (07) கைது செய்துள்ளனர்.

கம்பளை, வெலம்பொடவிலிருந்து தலவாக்கலைக்கு கழிவு தேயிலை கொண்டு செல்லப்படுவதாக ஹட்டன் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வைத்து குறித்த லொறியை பொலிஸார் நிறுத்தி சோதனை செய்தனர்.

கழிவு தேயிலையை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் லொறிக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், சாரதி மற்றும் உதவியாளர் குறித்த லொறியையும் பொலிஸார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கழிவு தேயிலை மற்றும் சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள், என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.