2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தையிட்டி விகாரை முன்பான போராட்டம்: கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பிணையில் விடுவிப்பு

உள்ளூர்December 21, 2025 · 8 months முன்2
தையிட்டி விகாரை முன்பான போராட்டம்: கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பிணையில் விடுவிப்பு

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. 

குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்றிருந்தனர். 

இந்நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் , வேலன் சுவாமிகள் , வலிக்காமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களுமாக ஐந்து பேரை  கைது செய்திருந்தனர்  

கைது செய்யப்பட்ட ஐவரையும் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.