2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எழுவைதீவில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருட்டு

உள்ளூர்January 26, 2026 · 7 months முன்1
எழுவைதீவில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருட்டு

யாழ்ப்பாணம், எழுவைதீவில் சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் காணப்பட்ட வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி அம்மன் ஆகிய ஐம்பொன்களால் ஆனா இரு எழுந்தருளி விக்கிரகங்களும் களவாடப்பட்டுள்ளன.

அது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் எழுவை தீவுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடல் கடந்த தீவான எழுவை தீவுக்கு படகில் மாத்திரமே பயணம் செய்ய கூடிய நிலைமை உள்ளமையால், களவாடப்பட்ட விக்கிரகங்கள் எழுவைதீவை விட்டு வெளியே எடுத்து செல்லப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக காணப்படுவதனால், குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை விரைவில் கைது செய்து சிலைகளை மீட்க முடியும் என ஊர்காவற்துறை பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.