2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

தமிழக வெற்றிக் கழக தலைவரின் வீட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

அரசியல்May 4, 2026 · 3 months முன்2
தமிழக வெற்றிக் கழக தலைவரின் வீட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், முற்பகல் 11 மணியளவில் தவெகவின் விஜய் 108 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.