2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

UNDP பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்

உள்ளூர்January 22, 2026 · 7 months முன்3
UNDP பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்

சுவிட்சர்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூ அவர்களை ஜனவரி 21ஆம் திகதி டாவோஸில் சந்தித்துப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் இதன்போது நன்றியைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில், பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான பலப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாகத் தேசத்தைக் கட்டியெழுப்பி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.