2026 September 6, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்!

உள்ளூர்September 3, 2026 · 3 days முன்9
நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்!

நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நிலக்கரி இருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். 

இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அவற்றில் முதலாவது கப்பல் நாளை (04) வந்தடையவுள்ளது. 

மற்றைய கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதுடன், குறித்த கப்பல்களிலிருந்து நிலக்கரியை இறக்கிய பின்னர் நிலக்கரி மூலம் முறையான மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். 

தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் மின் உற்பத்தி தற்போது பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே புபுது ஜயகொட இதனை தெரிவித்தார்.