2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அஞ்சல் திணைக்களத்தின் டொலர் விவகாரம்: 6 லட்சம் டொலர் மாயம் குறித்து அதிரடி விசாரணை!

உள்ளூர்April 28, 2026 · 6 months முன்4
அஞ்சல் திணைக்களத்தின் டொலர் விவகாரம்: 6 லட்சம் டொலர் மாயம் குறித்து அதிரடி விசாரணை!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமக்குரிய கொடுப்பனவு கிடைக்கவில்லை என அமெரிக்கத் அஞ்சல் சேவை விடுத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேலும், அஞ்சல் திணைக்களத்தின் ஊடாகச் செலுத்தப்பட்ட சுமார் 600,000 அமெரிக்க டொலர் நிதியே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.