2026 August 19, Wednesday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ☀️ மட்டக்களப்பு 33°
LIVE
ADB – இலங்கை இடையே புதிய கடன் ஒப்பந்தம்!கட்டுநாயக்கவில் நீர்த்தாரை மரியாதையுடன் வியட்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு!பெரஹராவை முன்னிட்டு வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் STF வசம் சிக்கினார்!மேல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு!22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக SJB மனு!22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு!பிள்ளையனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

ADB – இலங்கை இடையே புதிய கடன் ஒப்பந்தம்!

உள்ளூர்August 19, 2026 · 37 minutes முன்3
ADB – இலங்கை இடையே புதிய கடன் ஒப்பந்தம்!

வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷெனான் கவ்லின் (Shannon Cowlin) ஆகியோருக்கு இடையில் இன்று (18) கொழும்பு பொதுத் திறைசேரியில் இக்கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்முதலீடு மற்றும் கைத்தொழில் திட்டத்திற்காக 200 மில்லியன் டொலர் கொள்கை சார்ந்த கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.

இத்திட்டம் கடந்துபோன 2025 தேசிய கொள்கைக் கட்டமைப்புடன் இணங்கிச் செல்வதுடன், நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமைகளாக இருப்பதுடன், அம்முன்னுரிமைகள் 2026-2028 காலப்பகுதிக்கான பிரதான அரச முதலீட்டுத் திட்டங்களிலும் பிரதிபலிக்கின்றன என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பிரதான அபிவிருத்தி சவால்களுக்குத் திட்டமிட்ட அணுகுமுறை மூலம் தீர்வுகளை வழங்குவதற்காக வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் இரண்டு உப திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.