2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை – ஈரான் சபாநாயகர்

உலகம்April 12, 2026 · 4 months முன்2
அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை – ஈரான் சபாநாயகர்

பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெறுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.

X தளத்தில் பதிவிட்டுள்ள கலிபாப், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஈரான் நல்லெண்ணத்தையும் விருப்பத்தையும் கொண்டிருந்ததாக வலியுறுத்தியுள்ளார். 

இருப்பினும், முந்தைய இரண்டு போர்களின் அனுபவங்கள் காரணமாக தமக்கு மறுபுறம் இருந்த தரப்பினர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஈரானிய தூதுக்குழு முன்னோக்கிச் செல்லும் முயற்சிகளை முன்வைத்த போதிலும், எதிர்த் தரப்பினர் இந்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவின் நம்பிக்கையைப் பெறுவதில் இறுதியில் தோல்வியடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், ஈரானின் நாற்பது நாள் தேசிய தற்காப்பு சாதனைகளை வலுப்படுத்தும் முயற்சியில் இருந்து நாம் ஒரு கணம் கூட பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், வசதிகளைச் செய்து கொடுத்த பாகிஸ்தானுக்குத் தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.