2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்!

உள்ளூர்April 28, 2026 · 6 months முன்6
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்!

டிட்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் இடைக்கால வீடுகளை அமைக்கும் பணிகள் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேருக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தற்காலிக வீடுகளை குறுகிய காலத்திற்குள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள பங்களிப்புடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.இந்த முயற்சி அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ (இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.