2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

புகையிரதத்துடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் – மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

உள்ளூர்January 27, 2026 · 7 months முன்2
புகையிரதத்துடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் – மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் புகையிரத கடவையினை புகையிரத சமிக்கையை மீறி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது – 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.