2026 September 11, Friday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்கிறது – பாகிஸ்தான் 268 ஓட்டங்கள் பின்னிலை!போர் பதற்றம் தீவிரம் – கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!தெஹிவளையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை – கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கொந்தளிப்பு எச்சரிக்கை!உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின் ராஜ்நாத் சிங் புறப்பட்டார்!புதிய ஐபோன்களுடன் ஆப்பிளின் அடுத்த தலைமுறை தொடக்கம்!22வது திருத்தம்: செப்டம்பர் 24, 25ல் பாராளுமன்ற விவாதம்!சட்டவிரோத சொத்து விசாரணையில் ரூ.100 மில்லியன் வீடுகள் சிக்கின!

தெஹிவளையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

உள்ளூர்September 11, 2026 · 1 hour முன்3
தெஹிவளையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 

இன்று (11) அதிகாலை இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். 

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.