2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

தென்னந்தோப்பில் தேங்காய் திருடியவருக்கு நேர்ந்த கதி

உள்ளூர்September 2, 2025 · 12 months முன்0
தென்னந்தோப்பில் தேங்காய் திருடியவருக்கு நேர்ந்த கதி

மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தென்னந்தோப்பில் காவலில் ஈடுபட்டிருந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நபர் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபரும் மற்றுமொரு நபரும் இன்று (02) அதிகாலை சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னந்தோப்பில் தேங்காய்களை திருடிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது உரிமையாளரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

எவ்வாறாயினும் அவர் காயத்துடன் 500 மீற்றர் வரையான தூரம் ஓடி கொஹோலன்வல பிரதான வீதியில் வீழ்ந்த நிலையில், அவரை அங்கிருந்த மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், அந்த தென்னந்தோப்பில் பலமுறை தேங்காய் திருடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தோப்பின் காவலில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அனுமதியின்றி தென்னந்தோப்புக்குள் நுழைந்து தேங்காய் திருட முயன்ற மற்றொரு சந்தேக நபரை கைது செய்ய மகாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.