2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குவைத் விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு!

உலகம்April 24, 2026 · 4 months முன்3
குவைத் விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு!

குவைத் வானூர்தி சேவைகள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு இணங்க, குவைத்தின் தேசிய வானூர்தி சேவையான குவைத் ஏர்வேஸ் மற்றும் தனியார் வானூர்தி சேவையான ஜசீரா ஏர்வேஸ் ஆகியன தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவுள்ளன.

பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கான வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் தொடர்பு மையம் சமூக வலைதளங்கள் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத் சர்வதேச வானூர்தி நிலையம், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.